இந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்

வாஷிங்டன்: இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இழிவாக பேசியதற்கு ஜோ பிடன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவபம்ரில் நடக்கிறது. ஆளும் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் டிரம்பும், துணை அதிபர் பதவிக்கு பென்சும் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களம் காண்கிறார்.

விவாதம் ஒன்றில் அதிபர் டிரம்ப், இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து இழிவாக கருத்து ஒன்றை அண்மையில் தெரிவித்தார். இதற்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவை இழிந்தவர் என்று அழைத்தார். இது நண்பர்களைப் பற்றி நீங்கள் எப்படிப் பேச வேண்டும் என்று தெரியாமல் பேசுகிறீர்கள்.  காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை நீங்கள் எவ்வாறு தீர்ப்பது என்பது தெரியாமல் உள்ளீர்கள் என்று கூறினார்.

டுவிட்டர் ஒன்றில்  கண்டித்துள்ள பிடன், கமலா ஹாரிஸும் நானும் எங்கள் கூட்டாட்சியை ஆழமாக மதிக்கிறோம், எங்கள் வெளியுறவுக் கொள்கைக்கு மரியாதை செலுத்துவோம் என்று கூறினார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: ஒபாமா-பிடென் காலம் மிகச்சிறந்தவை. பிடன், ஹாரிஸ் நிர்வாகம் பெரிய முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புகிறது. நாங்கள் இயற்கையான கூட்டாளிகளாக இருக்க முடியும், இருக்க வேண்டும்.

நாங்கள் சந்தைகளையும் திறந்து அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நடுத்தர வர்க்கத்தை வளர்ப்போம். மேலும் காலநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், நாடுகடந்த பயங்கரவாதம் மற்றும் அணுசக்தி பெருக்கம் போன்ற பிற சர்வதேச சவால்களை ஒன்றாக எதிர்கொள்வோம் என்று கூறினார்.