டெஹ்ராடூன்:

காதலர் தினத்தையொட்டி, அத்துமீறும் காதலர்களை வீடியோ எடுக்க 250 தன்னார்வலர்களை பஜ்ரங்தள் அமைப்பு நியமித்துள்ளது.


உத்ராகண்ட் மாநில தலைநகர் டெஹ்ராடூனில் காதலர் தினத்தையொட்டி, காதலர்களை கண்காணிக்க 250 தன்னார்வலர்களை பஜ்ரங்தள் அமைப்பு நியமித்துள்ளது.

இவர்கள் பூங்கா போன்ற பொது இடங்களில் வீடியோ கேமிராவுடன் கண்காணிப்பார்கள். அத்துமீறும் காதலர்களை படம் பிடித்து போலீஸாரிடம் கொடுத்து புகார் செய்வோம். காதலர்களை துன்புறுத்த மாட்டோம் என்று இந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதா சாவூபே கூறும்போது, காதலர்களை துன்புறுத்தவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கமாட்டோம். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.