ஓணம்: கேரளாவில் 10 நாளில் 440கோடி மது விற்று சாதனை!

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.440 கோடி அளவிலான மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

கேரளாவுன் பிரபலமான ஓணம் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் மதுவிற்பனையும் படு ஜோராக நடைபெற்றுள்ளது.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கியது. மலையாள மொழி பேசும் மக்கள் இதனை வசந்த விழாவாக கொண்டாடுவார்கள்.

25-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை 10 நாட்களுக்கு கேரளாவில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

10-ம் நாளான நேற்று நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஓண விருந்து அளித்து மகிழ்ந்தனர்.

பொதுவாக ஓணம்  பண்டிகையின்போது கேரளாவில் மது விற்பனை அமோகமாக நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு  வழக்கத்தை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது மது  விற்பனை ரூ.411.14 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ.29.46 கோடிக்கு அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.