கர்னாடகா : அமைச்சர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு

--

பெங்களூரு

ர்னாடகா மாநில மின்துறை அமைச்சர் சிவகுமார் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது கர்னாடகாவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கடந்த மாதம் கர்னாடகா மாநில மின்துறை அமைச்சர் சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  அப்போது சில ஆவணங்கள் அவர்களிடம் சிக்கியதாக கூறப்பட்டது.

இன்று மீண்டும் வருமானவரித்துறையினர் சிவகுமார் வீட்டிலும், அவர் உதவியாளர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் விஜய் முல்கந்த் வீடு உட்பட பல இடங்களில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.  பெங்களூரு, சென்னை, டில்லி போன்ற நகரங்கள் உட்பட 10 இடங்களில் இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.  இந்த சோதனைகளால் கர்னாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஆரம்பித்துள்ளது.