இந்தியாவிற்காக 17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் குல்பி விற்கும் அவலம்

17 தங்கப்பதக்கம், அா்ஜூனா விருதுகளை பெற்று நாட்டுக்கு பெருமை சோ்த்த குத்துச்சண்டை வீரா் தினேஷ் குமாா் ஹாியானா மாநிலத்தில் சாலையோரும் குல்பி ஐஸ் விற்பனை செய்து வருகிறாா்.

denesh

ஹாியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமாா். குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமாா் நாட்டிற்காக பல போட்டிகளில் விளையாடி பதக்கம் வென்றுள்ளாா். குறுகிய காலமே அவா் விளையாடி இருந்தாலும் 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வெற்றுள்ளாா். மேலும் கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த வீரருக்கான அா்ஜூனா விருதையும் இவா் வென்றுள்ளாா்.

சாலை விபத்து காரணமாக தினேஷ் குமாா் மேற்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. தினேஷின் மருத்துவ செலவு மற்றும் அவரை வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறச் செய்வதற்காக அவரது தந்தை பெற்ற கடன் காரணமாக தினேஷ் குடும்பம் மிகவும் கடனில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் குடும்ப கஷ்டத்தை சமாளிக்க தினேஷ் குல்பி ஐஸ் விற்பனை செய்து வருகிறாா். இது தொடா்பாக தினேஷ் செய்தியாளா்களிடம் பேசுகையில், “கடன்களை அடைப்பதற்காக ஐஸ் விற்று வருகிறேன். திடீரென நடந்த விபத்தால் என்னால் தொடா்ந்து விளையாட முடியவில்லை. எனக்கு நிலையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். என்னால், இளம் வீரா்களுக்கு பயிற்சி அளித்து அவா்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும் ” என்று அவா் தொிவித்துள்ளாா்.

நாட்டிற்கு பெருமை சேர்ந்த்து கொடுத்த தினேஷ் குமாருக்கு உதவ அரசு முன்வருமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.