மக்களவை தேர்தல் 2019 : போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பறிமுதல் – ஒருவர் கைது

வுரங்காபாத்

வுரங்காபாத் தொகுதியில் போலி மின்னணு வாக்கு இயந்திரம்  வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுளார்.

மாதிரி படம்

நேற்று மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடந்தது.    இந்த தொகுதிகளுக்குட்பட்ட காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் உடன் நடந்தது.    இந்த வாக்குப் பதிவின் போது மின்னணு வாக்கு இயந்திரம்  பயன்படுத்த  பட்டது.

அவுரங்காபாத் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்கு சாவடி வாசலில் சுரேஷ் பாஸ்வான் என்னும் ஒரு இளைஞர் போலி மின்னணு வாக்கு இயந்திரத்துடன் வந்துள்ளார்.   அந்த போலி இயந்திரத்தை அங்கிருந்த மக்களிடம் காட்டி தான் ஆதரவளிக்கும் ஒரு கட்சிக்கு வாக்களிகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதை ஒட்டி அங்கு விரைந்த காவல் துறையினர் அவரிடம் இருந்த போலி மின்னணு வாக்கு இயந்திரத்தை கைப்பற்றி உள்ளனர்.  சுரேஷ் பாஸ்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.   அவரிடம் தீவிர விசாரணை நடை பெற்று வருகிறது