விவாகரத்து வழக்கு நடக்கும் போதே மறு விவாகம் செய்யலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி

விவாகரத்து குறித்த வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ள போது ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் ஒரு பெண் தனது கணவரிடம் விவாகரத்துகோரிய வழக்கில் வெற்றி  பெற்றுள்ளார்.     அதை எதிர்து அவர் கணவர் மேல் முறையீடு செய்த வழக்கு  நிலுவையில் இருந்தது.    அப்போது கணவரும் மனைவியும் கலந்து பேசி விவாகரத்தை ஏற்க முடிவு செய்தனர்.    அவர்கள் ஏற்ற மனுவை நீதிமன்றம் ஏற்று கணவரின் மேல் முறையீட்டு மனுவை  ரத்து செய்தது.

இந்த உத்தரவு ரத்து செய்வதற்கு இரு வாரம் முன்பே அந்த கணவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார்.    இந்த விவாகரத்து குறித்து இரண்டாம் மனைவிக்கும் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது.   அதனால் அவர் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போது தனது திருமணம் செல்லுமா என வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த வழக்கிலும் திருமணம் செல்லாது என தீர்ப்பு வந்தது.    அதையும் எதிர்த்து இரண்டாம் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.    இந்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, விவாகரத்து குறித்த வழக்கு நிலுவையில் இருந்த போது செய்துக் கொண்ட இரண்டாம் திருமணம் செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளது.