1கோடி மாஸ்க் தயாரிப்பு பணியில் இளைஞர் காங்கிரசார் – வீடியோ…

டெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் முகக்கவசம் (மாஸ்க்) தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், தேவையான முகக்கவசம் கிடைக்காத நிலையில், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் முகக்கவசம் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுமக்களின் தேவைக்காக ஒருகோடி முகமூடிகளை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் துணிகளைக்கொண்டு டெல்லியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் தலைமையகத்தில் மூன்று அடுக்கு முகமூடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மூகமூடிகள் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.