சென்னை,

மிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதா நேற்று  தமிழக அரசு அறிவித்தது. இதன் காரணமாக இன்று காலை முதல் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மேலும், ஒரு நாள் கட்டணமான ரூ.50க்கு பாஸ் எடுத்தும், அதுபோல ஒரு வார கட்டண பாஸ் எடுத்தும் உபயோகப்படுத்தி வருபவர்களின் பாஸ்-சும் செல்லாது என்று அறிவித்தபடியால், பஸ் பாசை மட்டுமே நம்பி வந்த பயணிகள் நடத்துனர்களிம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பெரும்பாலான பஸ்களில் பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் உபயோகப்படுத்தும் பஸ் பாஸ்களின் விலை உயர்வு குறித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி,   ஒரு நாள் முழுவதும் பயணிக்க ரூ.70 பாஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.50 வசூலிக்கப்பட்டது.

அதுபோல, ரூ.1000 ஆக இருந்த மாதாந்திர பாஸ் தற்போது ரூ.1400 ஆக உயர்ந்துள்ளது.

இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம்  ரூ.5

அதிகபட்ச கட்டணம்   ரூ.19

விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ வரை  ரூ.24

குளிர்சாதன பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம்  ரூ.42

 வால்வோ பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம்  ரூ.51ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதீநவீன பேருந்துகளில்  ரூ.33ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.