சென்னை:

கொரோனா நிவாரண நிதியாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியமான 14.11  கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு காரணமாக, பொதுமக்கள் நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி உள்பட மாநில அரசுகளும் வேண்டுகோள் விடுத்தன.

அதைத்தொடர்ந்து, தொழில்அதிபர்கள், நிறுவனங்கள், திரையுலக ஜாம்பவான்கள், நட்சத்திரங்கள், விளையாட்டுவீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நிதிகளை வாரி வழங்கி வருகின்றன்ர்.

மேலும் அரசியல் கட்சிகள், எம்பி, எம்எல்ஏக்களும் தங்களது தொகுதி நிதி உள்பட பல்வேறு வகையில் நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதன் வாயிலாக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  ரூ.36 கோடி இதவரை  நன்கொடையாக கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியமாக ரூ.14.11 கோடியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்ச எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.