வாஷிங்டன் நகரத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் மரணம் – ஐவர் படுகாயம்

வாஷிங்டன்

மெரிக்காவில் வாஷிங்டன் நகர தெருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது.   வெள்ளை மாளிகைக்கு மிக அருகாமையில் உள்ள தெரு கொலம்பியா சாலை 14 ஆம் தெரு ஆகும்.   இந்த தெரு வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த தெருவில்ல் நேற்று இரவு அமெரிக்க நேரப்படி சுமார் 10 மணிக்கு அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.    ஃபாக்ஸ் 5 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் மற்றொரு தொலைக்காட்சி இந்த துப்பாக்கிச் சூட்டில்  பலர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.   இது குறித்து காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் மரணம் அடைந்ததாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.