சென்னை:

ரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடவேண்டும் என்று மத்தியஅரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டு மூலம் அரசின் மானிய விலை உணவு பொருட்கள் பெறுவதில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் டில்லியில்  மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து மாநில உணவுத் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்,  இதில் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவது குறித்து வலியுறுத்தினார்.

இந்த திட்டத்தில் இதுவரை 10 மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு  கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப் போவதாக வெளிவந்த செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.