ந்தியாவில்  நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர் என்றும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடந்திருக்கின்றன என்றும்  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி  செய்தியாளர்களிடம் பேசினார்.
 
c
அப்போது அவர், “’இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 5 லட்சத்து ஆயிரத்து 423 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில்  ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 671 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாள்தோறும் 1,374 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில் சராசரியாக 400 பேர் பலியாவதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில் 17 பேர் இறப்பதாகவும், ஒவ்வொரு 3.7 நிமிடத்‌திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், இது போன்ற சாலை விபத்துக்களில் பலியாகும் நபர்களில் 54 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கடந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 69,059 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 201‌5-ம் ஆண்டில், உத்‌தரபிரதேசத்தில் சாலை விபத்துகளில் 17,666 பேர் உயிரிழந்துள்ளனர். நகரங்களைப் பொறுத்தவரை மும்பையில் அதிகபட்சமாக 23,46‌8 விபத்துகள் நேரிட்டுள்ளன. டெல்லியில் அதிகபட்சமாக 1,622 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.
இவற்றைக் குறைக்க கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதோடு, ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் எடுத்துள்ளோம். ஆனால் அவை பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
எனினும் இந்தச் சூழ்நிலையை மாற்ற நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.

நிதின் கட்காரி
நிதின் கட்காரி

நாடு முழுவதும் 2015-ம் ஆண்டில் நேரிட்ட சாலை விபத்துக்களில் 77.1 சதவிகித விபத்துகள், ஓட்டுநர்களின் தவறாலும், மோசமான சாலைகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், முந்தைய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட தரமற்ற பாலங்களாலும், சாலைகளாலும் அதிக விபத்துகள் ஏற்படுகிறது” என்று கட்காரி தெரிவித்தார்.