இஸ்லாமாபாத்:

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை அமைப்பு நிதியை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனா தனது பழங்கால பட்டு பாதையை மீட்டெடுத்து வருகிறது. இதில் ஒரு கட்டமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முக்கிய சாலை அமைப்பு திட்டங்களுக்கு சீனா நிதியுதவி அளிக்க சம்மதம் தெரிவித்தது.

இதற்கு சீனா-பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை என பெயரிடப்பட்டது. சீனாவில் ஜிங்ஜியாங் பகுதியுடன் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியுடன் இணைக்க இந்த திட்டத்தின் மூலம் சாலை வசதி ஏற்படுத்தப்படும்.

இதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் இந்த சாலை ஊழல் நடக்கும் என்ற தகவலின் பேரில் நிதியுதவி அளிப்பதை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.