12 ராசிகளுக்கும் 2021-ம் ஆண்டுக்கான ஒரு வரி பொதுப்பலன்… நெல்லை வசந்தன்!

நெட்டிசன்:

2021- ஒரு வரி பலன்கள் – நெல்லை வசந்தன் முகநூல் பதிவு

கன்னியா லக்கணம்… தொழில் ஸ்தானாதிபதி ..புதன் …சூரியனுடன் சேர்ந்து நான்காம் இடத்தில் அமர்ந்திருக்க “விளையும் ஆதித்தனும் கனக்கனும் நாலில் அமர்ந்ததால் ராஜயோகம்” பட்ட கஷ்டங்கள் விலகும் என ஜோதிடம் கூறுகிறது

இதுவரை தடைபட்ட வியாபார ஒப்பந்தங்கள் இனி இனிதாக செயல்படும். கல்வியில் பெரும் மாறுதல்களும் கல்வி குறித்த புதிய நிர்வாகமும், வழிமுறைகளும் உருவாகும்

நோய் ஸ்தானம் ……கும்பம் அதன் அதிபதி சனி விரையத்தில் அமர்ந்து நோய் நிவர்த்திக்கு அதிபதி 11-ஆம் இடம் வலுவாக காணப்படுவதால் நோய் நிவர்த்தி ஏற்படும்

மேஷத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதும், விருச்சிகத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதும், செவ்வாய் 4ம் பார்வையாக லாபத்தை பார்ப்பதும் பொருளாதார மாற்றத்திற்கு வழிவகுக்கும். ஜோதிடர்கள் இந்த ஆண்டு, அரசியலில் தலையிட வாய்ப்புகள் அதிகம்.

இனி ராசி வாரியாக ஒரு வரி பலன்கள்:-

மேஷம் – புதிய யோசனை செயல்பாடு

ரிஷபம் – இடமாற்றம் வெற்றிகள்

மிதுனம் – கடின உழைப்பு காரியசித்தி

கடகம் –  உத்தியோக சிந்தனைகள் உயர்வு காண திட்டம்

சிம்மம் – எண்ணியதை எண்ணியவாறு செய்ய வழிவகை

கன்னி – புதிய முயற்சி வெற்றி

துலாம் – இடம் வாங்குதல் இடத்தை சரிசெய்தல்

விருச்சிகம் – வேலை, வியாபாரம் சம்பந்தப்பட்ட வெகுதூர பயணம்

தனுசு – விடுபட்ட, தடைபட்ட காரியங்களில் வெற்றி

மகரம் – டாக்குமெண்ட் சிக்கல், தடைபட்ட  ஒப்பந்தம் முடிவுக்கு வரும்

கும்பம் – தன விரயம், காரியசித்தி.

மீனம் – புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுதல்

கிரகங்களை நம்புபவர்களுக்கு மட்டும் பரிகாரம்:-

பண முடக்கம் நிவர்த்தியாக ஏழுமலையான் தரிசனம், கும்பகோணம்… சந்திரசேகர் கோவில் தரிசனம் செய்யலாம்.

வேலை, டாக்குமெண்ட் தொடர்பான சிக்கல் அகல மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

பணவருவாய்க்கு மாரியம்மனையும், நோய்நிவர்த்திக்கு வாராஹி அம்மனையும், போட்ட திட்டங்கள் நிறைவேற உஜ்ஜைனி மாகாளி அம்மனையும் தரிசனம் செய்யலாம்.