துபாய்: விசா காலம் முடிந்தோர்  நாளைக்குள் (செப்டம்பர் 11ந்தேதி)  வெளியேற வேண்டும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே  மார்ச் 1க்கு பின் காலாவதியான சுற்றுலா விசா பயணிகள் மற்றும், விசா நீட்டிக்கப் படாதவர்கள்,  நாட்டைவிட்டு வெளியேற இன்றும், நாளையும் மட்டுமே உள்ளது. தகுதியான வர்களை விசாநை நீட்டித்துக்கொள்ள செப்டம்பர் 10ந்தேதி வரை வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்திருந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா விசா, தொழில்விசாக்களில் ஐக்கிய அரபு அமிரகம் வந்தவர்கள்,  தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த  ஜூலை மாதம், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வருகை அல்லது சுற்றுலா விசாக்களை 2020 டிசம்பர் இறுதி வரை நீட்டிப்ப அறிவித்தது. ஆனால், பின்னர், அந்த முடிவை ரத்து செய்து, கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, ஐக்கிய அரசு எமிரேட்டின், குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையமான (ஐ.சி.ஏ), காலாவதியான வருகை அல்லது சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர் களுக்கு ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு மாதத்திற்கு அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால்,   விசா காலம் முடிந்தவர்கள் காலத்தை நீட்டிப்பதற்கும், வேலைவாய்ப்பு விசாவாக மாற்றுவதற்கும்  செப்டம்பர் 10ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அது இன்றுடன் முடிவடைகறிது.

இந்த நிலையில், விசா புதுப்பிக்கப்படதவர்கள், செப்டம்பர் 11ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் அல்லது, நாட்டின் சட்டத்தின்படி, அதிகப்படியான அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.