சென்னை:

டந்த 21ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த நிலையல் இன்னொரு நடிகரும் மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  அவர் நடிகர் உதயநிதி  ஸ்டாலின்.

திரைப்படத்தில் இவர் நடிப்பதற்கு முன் வரை அரசியலில் ஈடுபாட்டுடன் இருந்தார். இதை அவரே சொல்லியிருக்கிறார். “முரசொலி மாறன் உட்பட தி.மு.க. வேட்பாளர்கள் பலருக்கு வாக்கு சேகரித்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நடிக்க வந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்ததை அடுத்து உதயநிதிக்கு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த (ஜனவரி) மாதம் , பேருந்து கட்டண உயர்வை எதிரத்து தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கைதனவர்களை மதுரையில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நான் அரசியலுக்குத் திடீரென்று வரவில்லை; பிறந்ததில் இருந்தே அரசியலில் உள்ளேன். கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இவரது ரசிகர் மன்றத்தை அன்பில் மகேஷ் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், மகேஷூடன் ஆலோசனை நடத்திய உதயநிதி தனது ரசிகர்களைக் கூட்டி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசித்திருக்கிறார்.

இதற்கு உதயநிதியின் தந்தையும் தி.மு.க. செயல்தலைவருமான ஸ்டாலின் பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.

அநேகமாக வரும் மார்ச் இரண்டாவது வாரம் மதுரையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் மாநாடு நடக்கும் என்று கூறப்படுகிறது.

 

ஆர்வம் ஏற அறிமுக கூட்டம் மதுரை ஒத்தகடை மைதானம் ..மார்ச் 19ம்தேதி..தகவல்