சென்னை: 

பிரான்சில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களின் மருத்துவ செலவுகள் குறித்து மாநில அரசே நிர்ணயிக்கும் என்று மத்திய அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திலும் ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவர், அமெரிக்காவில் சென்னை வந்த 15 வயது சிறுவன் மற்றும்  மூன்றாவது நபராக நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியர் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது. இதையடுத்து இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நான்காவது நபராக பிரான்சில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.