மதுரை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி. மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு திமுகவைச் சேர்ந்த  எம்எல்ஏ அன்பழகன் உயிரிழந்த நிலையில், மேலும் சில திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுபோல அதிமுக எம்எல்ஏ மூர்த்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் கே.பி.அன்பழகனும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த  பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில்,  சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அனைவரும்  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.