சசிகலாவின் பினாமியா? வருமான வரித்துறை நடவடிக்கை எதிர்த்து 3ஆண்டுகளுக்கு பிறகு விஎஸ்ஜே தினகரன் வழக்கு…

சென்னை:

சிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி இருப்பதை எதிர்த்து பெரம்பூர் ஸ்பெக்டம் மாலின் உரிமையாளர்களின் ஒருவருமான விஎஸ்ஜே தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் 2 வாரங்களில் ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவின் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.  அதில் கிடைத்த ஆதாரங்களின் பேரில் பெரம்பூரில்7 உள்ள வி.எஸ்.ஜே. தினகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது.  அப்போது, பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்களையும், வருமான வரித்துறை முடக்கம் செய்தது. சசிகலாவின் பினாமி விஎஸ்ஜே தினகரன் என்று குற்றம் சாட்டியது.

சென்னை பெரம்பூரில், ஸ்பெக்ட்ரம் மால் என்ற கட்டிடத்தைக் கங்கா பவுண்டேசன் கட்டியது. இந்த மாலின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு கடையையும், 11 சதுர அடி நிலத்தையும்  நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே.தினகரன் வாங்கியதாக கூறப்பட்டது.  இவர் ஸ்பெக்டம் மாலின் உரிமையாளர்களில் (V.S.J. Dinakaran, co-owner of Spectrum shopping mall at Perambur ) ஒருவராகவும் இருந்து வருகிறார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், சுமார் 3 ஆண்டுகள் கழித்து, தற்போது வி.எஸ்.ஜே.தினகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. அவரது மனுவில்,  ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள தனது சொத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான  நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  மனு  தொடர்பாக  வருமான வரித்துறை 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.