அமெரிக்காவில் தொடரும் இனவெறி: இந்தியரின் கடையை தீ வைத்து கொளுத்த முயற்சி!

வாஷிங்டன்:

மெரிக்காவில் புளோரிடா மாகானத்தில் செயிண்ட் லூசி கவுண்டியில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் கடைக்கு அமெரிக்க இனவெறியர் ஒருவர் தீவைத்து எரிக்க முயற்சித்தது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கடை

அமெரிக்காவில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மீது இன, மதவெறி தாக்குதல்கள்,  அதிகரித்து வருகின்றன.

கடந்த மாதம் கன்சாஸில் சீனிவாஸ் என்ற இந்திய என்ஜினீயரை அமெரிக்க இனவெறியர் ஒருவர், “ அமெரிக்காவை விட்டு வெளியேறு” என்று உரக்க கத்தியபடியே சுட்டுக்கொன்றார்.  அதன்பின் இந்தியப்பெண் ஒருவரும் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.

இந்த நிலையில், புளோரிடா மாநிலத்தின் செயிண்ட் லூசி கவுண்டி நகரில் இந்தியர்  நடத்தி வரும் கடையை ரிச்சர்டு லாயிட் என்ற அமெரிக்க இனவெறியர்  தீயிட்டுக்கொளுத்த முயற்சித்திருப்பது மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனவெறியன் ரிச்சர்டு லாயிட்

அந்த இனவெறியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், அது அரபு நாட்டை சேர்ந்தவர்  நடத்திவரும் கடை என கருதி தீயிட்டுக்கொளுத்த முயற்சித்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை  நகர ஷெரீப், கென் மஸ்காரா உறுதி செய்துள்ளார். அவர், “கடையை கொளுத்திய ரிச்சர்டு லாயிட் நல்ல மனநிலம் இருக்கிறார். அவர் மனநலம் பாதிப்பட்டவர் அல்ல.  இந்த சம்பவம் குறித்து அட்டார்னி ஜெனரல் அலுவலகம் விசாரித்து தெரிவிக்கும்” என்றார்.

இந்தியர்கள் மீதும் அவர்களது வணிக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து அமெரிக்க இனவெறியர்கள் தாக்குதல் நடத்திவருவது  அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.