மேலும் ஒரு விவசாயி தற்கொலை! பலி எண்ணிக்கை 12 ஆனது!

தஞ்சாவூர்:

விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே மாசிலாமாணி என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

இவரோடு சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

போதுமான மழை பெய்யாததாலும் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது.

foremer-suicideஇதனால் ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் 11 பேர் இதுவரை தற்கொலை செய்துகெண்டுள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை உக்கடை விவசாயி மாசிலாமாணி நேற்று எலிக்கு வைத்திருந்த விஷமாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி மாசிலமாணி
தற்கொலை செய்துகொண்ட விவசாயி மாசிலமாணி

இவரோடு விவசாயிகள் பலி எண்ணிக்கை 12 ஆகியிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட விவசாய குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: After, crop damag, one more farmer, suicide, tamilnadu, total 12, எண்ணிக்கை 12 ஆனது!, தமிழ்நாடு, தற்கொலை, பலி, மேலும் ஒரு, விவசாயி
-=-