வட மாநிலங்களில் அதிகரிக்கும் வன்கொடுமை: ம.பி.யில் மேலும் ஒரு சிறுமி எரித்துக்கொலை

டில்லி:

த்திய பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு  சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக சிறுமிகள், இளம்பெண்கள் மீதான பாலியன் வன்கொடுமை வடமாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்கி உள்ளது.

இந்த நிலையிலும் சமீபத்தில், இதுபோன்று 2 சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் ஒரே வாரத்திற்குள் தற்போது 3வதாக மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டுள்ளார்,

மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் ஜுகர்பூர் பகுதியில் உள்ள கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த ரவிசத்தார் என்ற இளைஞர்  பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் காரணமாக மயக்கமடைந்த அந்த சிறுமிமீது மண் எண்ணை ஊற்றி  தீவைத்து உள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்த வாரத்தில் மட்டும் இதுபோன்று 2 சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 3வதாக மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.