சென்னை,

டிடிவி தினகரனுக்கு ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று மீண்டும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், டிடிவி தினகரனுக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், இந்த ஆட்சி நீடிக்காது என்றும் சசிகலா உறவினர் திவாகரன் கூறியிருந்த நிலையில், தற்போது விளாத்திக்குளம் எம்எல்ஏ உமா மகேஸ்வரியும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசி வருகின்றனர்.

இதன் காரணமாக எடப்பாடி அரசுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.