கீர்த்தி சுரேஷுக்கு இன்னொரு தேசிய விருது ரெடி!

கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய தெலுங்கு படமான ’’GOOD LUCK SAKHI’’ யின் முன்னோட்ட காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தி மற்றும் ஆங்கில படங்களை இயக்கியுள்ள நாகேஷ் குகுநூர் இயக்கியுள்ள முதல் தெலுங்கு படம் இது.

‘தொட்டது எதுவுமே விளங்காத’’ – துரதிருஷ்டமான கிராமத்து அப்பாவி பெண்ணான சகி, இந்தியாவின் மிக பெரிய துப்பாக்கி சுடும் வீராங்கனையாக உருவெடுப்பது தான் மூலக்கதை.
கீர்த்தி சுரேஷுக்கு,வீராங்கணை வேடம்.

அவருக்கு, துப்பாக்கி சுடுவதற்கு கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராக நடித்துள்ளார், ஜெகபதி பாபு.
ஆதி பினிஷெட்டி, கீர்த்தி சுரேஷின், கிராமத்து தோழனாக நடித்துள்ளார்.
டீசர் கலக்கலாவே இருக்கிறது.
தெலுங்கானா பகுதியில் லம்பாடி சமூகத்தினர் அணியும், உடை அணிந்து கிராமத்து காட்சிகளில் தோன்றுகிறார், கீர்த்தி சுரேஷ்.

கிராமத்து நாடகங்களில், புராண காலத்து கேரக்டர்களில் நடிக்கும் ஆதியை, பெயர் சொல்லி கூப்பிடுகிறாள், சகி.

‘’ என்னை என்.டி.ராமராவ் என்று தான் கூப்பிட வேண்டும்’’ என்று ஆதி முறைப்பாக சொல்ல-
‘’அப்படியானால் நான் சாவித்திரியாக்கும்’’ என்று குறும்பாக அவனுக்கு பதில் சொல்கிறாள், சகி.
டீசரை பார்த்த ரசிகர்கள், ‘’கீர்த்தி சுரேஷுக்கு இன்னொரு தேசிய விருது காத்திருக்கிறது’’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் ஓட்டும் ஆட்டோவில் ;உன் வாழ்க்கை உன் கையில்’ என்று எழுதி இருக்கும்.

இந்த படத்தின் நாயகி, ‘’ என் வாழ்க்கை என் கையில் ‘’ என்று சபதம் எடுத்து சாதிக்கிறாள்.இந்த தெலுங்குப்படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.

-பா.பாரதி.