சென்னையில் மேலும் ஒரு காவல்துறை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி…

சென்னை:

சென்னை காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கரோனாவுக்கு பலியானார். இந்த நிலையில்,  சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் தற்போது உயிரிழந்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் (வயது 57) கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

தமிழக காவல்துறையில் இதுவரை 1,155 காவலர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை  422 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர்.