உ. பி. யில் தொடரும் ரெயில் விபத்து : மற்றொரு ரெயில் தடம் புரண்டது… 75 பேர் காயம்

ருய்யா , உ. பி.

த்திரபிரதேசம் ஆருய்யா மாவட்டத்தில் நேற்று கைஃபியாத் எக்ஸ்பிரசின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் சுமார் 75க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் உத்திரப்பிரதேசத்தில் உத்கல் கலிங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு சுமார் 23 பேர் மரணமடைந்தது தெரிந்ததே.   இன்று அதிகாலை சுமார் 2.40 மணிக்கு டில்லிக்கு செல்லும் கைஃபியாத் எக்ஸ்பிரஸ் ஆருய்யா மாவட்டத்தில் பதா மற்றும் அச்சல்தா ரெயில் நிலையங்களுக்கிடையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

 

இது குறித்து ரெயில்வே அமைச்சக அதிகாரி அனில் சாக்சேனா, “ஒரு வாகனம் ஒன்று ரெயில்வே பாதையை கடக்கும் போது 100 கிமீ வேகத்தில் வந்த ரெயில் அந்த வாகனத்தில் மோதியது.   அதனால் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன.   காயமடைந்தோரின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை.  சுமார் 75 பேர் இருக்கலாம் என தெரியவருகிறது.  காயமடைந்தோருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.  சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தடம் புரண்ட 10 பெட்டிகளில் ஒரு பெட்டியில் பயணித்தவர்கள் மட்டுமே காயம் அடைந்துள்ளனர்.   மேற்கொண்டு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறினார்.