தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு!

சென்னை:

மிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டு மானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் ஒரே நாடு திட்டம் ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், நாடு முழுவதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு இருப்பதாலும் திட்டமிட்டபடி வரும் 1ந்தேதி ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed