டெல்லி:

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே சம்பள தினத்தை கொண்டுவர மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,  ஒரே மாதிரியான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம்,  பணியில் பாதுகாப்பு, உடல்நலம் போன்றவற்றிலும், விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதும் குறித்தும் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் முறைப்படுத்தப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாலர்களின் நலனை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே சம்பள தினம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தியஅமைச்சர் கங்வார்,  பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ஒரே மாதிரியான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய, அரசு திட்டமிட்டு வருகிறது. பணியில் பாதுகாப்பு, உடல்நலம், ஊதியம் ஆகியவற்றில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட கடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு விதித்துள்ளது.

மேலும் தொழிலாலர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் 2014 முதல் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

கடந்த ஜூலை 23, 2019 அன்று மக்களவையில் இதுதொடர்பான சட்ட திருத்தம் (Occupational Safety, Health and Working Conditions (OSH)) அதன்படி, பணி பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான 13 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒரே குறியீடாக இணைப்பதன் மூலம் தொழிலாளர்கள் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், தனியார் துறையினர் குறிப்பிட்ட நாளில் ஊதியம் வழங்குவது முறைப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், மத்தியஅரசின் இந்த திட்டத்தை தனியார் நிறுவனங்கள் ஏற்குமா என்பது கேள்விக்குறியே…