காங்டாக்:

சிக்கிம் மாநிலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை மகர சங்க ராந்தியை முன்னிட்டு முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக மாநில மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் முதலமைச்சராக இருப்பவர் பவன் குமார் சாம்லிங். இவர்தான் இந்தியாவிலேயே நீண்ட காலம் தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் ஏற்கனவே அறிவித்தபடி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அற்புத திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டசபை குளிர்கால கூட்ட தொடரின் போது, இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என சிக்கிம் அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது திட்டத்தை மாநில அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 12 ஆயிரம்  பேருங்கு தலைநகர் காங்டாங்கில் நடை பெற்ற அரசு விழாவில் மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்து மக்களிடையே பேசினார்.

இதன்படி, குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை என்ற பட்சத்தில், அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலையை பெறுவார்கள்… இதன் காரணமாக வேலை இல்லா திண்டாட்டமும் குறையும்….  ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாராமும் மேம்படும் என்று கூறினார்.

சிக்கிம் மாநில அரசின் இந்த அசத்ததான புதிய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யுபிஐ (UBI) எனப்படும் இலவச அடிப்படை மாத ஊதியம் வழங்கும் திட்டம் சிக்கிம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் எனவும்  அம்மாநில முதலமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.