பாதுகாப்புத் துறை நிறுவனத்திற்கு மனோகர் பரிக்கரின் பெயர்!

புதுடெல்லி: மறைந்த முன்னாள் கோவா முதல்வரின் பெயரை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனலைசிஸ் என்றழைக்கப்படும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனத்திற்கு சூட்ட மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அந்நிறுவனம் மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனலைசிஸ் என்று அழைக்கப்படும். முன்னாள் மத்திய அமைச்சராகவும் கோவா முதல்வராகவும் இருந்த மனோகர் பரிக்கரின் திறமையை நினைவுகூறும் விதமாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “அவரது பதவி காலத்தில் ஜம்மு காஷ்மீரின் பதன்கோட் மற்றும் ஊரி தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்” என்றார்.

கோவா முதல்வராக இருந்து, பின்னர் மத்திய ராணுவ அமைச்சராகி, பின்னர் மீண்டும் கோவா முதல்வராக பதவி‍யேற்ற மனோகர் பரிக்கர், எதிர்பாராதவிதமாக புற்றுநோய் தாக்கி மரணமடைந்தார்.