நவீன இந்தியாவின் சிற்பி நேரு! ராகுல்காந்தி புகழாரம்

டெல்லி:

‘நவீன இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பி நேரு!’ என்று வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழாரம் சூட்டி  டிவிட் பதிவிட்டு உள்ளார்.

நேருவின் பிறந்தநாளா இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி, அவரது ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு உள்ளார். முன்னதாக இன்று காலை  டெல்லியில் உள்ள அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். நேருவின்  பிறந்தநாளையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

நேருவின் 130வது பிறந்தநாளையொட்டி ராகுல்காந்தி  பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று அவரை நாம்  நினைவுகூறுவோம். எங்கள் முதல் பிரதமர், பண்டிட் ஜவஹர்லால் நேரு ஜி, ஒரு அரசியல்வாதி, தொலைநோக்கு பார்வையாளர், அறிஞர், இந்தியா என்ற பல்கலைக் கழகத்தை கட்டமைத்தவர்,  நவீன இந்தியாவின் சிறந்த கட்டிடக் கலைஞர்களில் ஒருவர், அவரை எங்களுக்கு நினைவிருக்கிறது, என்று புகழாரம் சூட்டி உள்ளார்.பு வைத்திருந்தவர்.

கார்ட்டூன் கேலரி