ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பங்குபெற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

டில்லி:

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக  பாகிஸ்தானில்  புகுந்து அதிரடி தாக்குதல் நடத்திய ராணுவ வீர்களில் ஒருவரான பிரிகேடியர் பிரதீப் யாதவ, ஓய்வு பெற்ற நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது.  கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது.

இந்த துல்லிய தாக்குதலி;னபோது, சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவிச் சென்று பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் கூண்டோடு அழித்தது. இந்த தாக்குதலில் 38 தீவிரவாதிகளை கொன்று குவித்ததாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 2 பாகிஸ்தான ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.  திகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை முடிந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ குழுவில் இடம்பெற்ற பிரிகேடியர் பிரதீப் யாதவ தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CONGRESS, One of the hero, Pradeed Yadav ji, rahul gandhi, Retd. Brigadiar Pradeed Yadav ji, Surgical strike hero, Surgical strike hero Retd. Brigadiar, காங்கிரஸ், பிரிகேடியர்பிரதீப் யாதவ், ராகுல்காந்தி
-=-