கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,  சுமார் 1000 செவிலியர்களும் பலியாகி உள்ளதாக  செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை  அச்சுறுத்திக்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றால்,  3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்பலியும் 10லட்சத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு பணியில் உலக நாடுகளில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள்  என அனைத்து தரப்பினரும் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா  சிகிச்சை அளிப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது. உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

உயிர்க்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஏராளமான மருத்துவர்கள் இதுவரை  உயிரிழந்துள்ள நிலையில்,  இதுவரை 1000 செவிலியர்கள் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சர்வதேச செவிலியர் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை அளிப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது.

உலக முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான செவிலியர் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், இதுவரை 1,000 செவிலியர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளது.