டில்லி

ற்போது ஒரே கட்சிக்கு 90% தேர்தல் நிதி செல்வதால் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியான பாஜகவுக்கு பெருமளவில் தேர்தல் நிதி நன்கொடையாக அளிக்கப்படுகிறது.   புள்ளி விவரங்களின் படி 2017-18 ஆம் ஆண்டில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ3.83 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.  இதே கால கட்டத்தில் பாஜக ரு. 437.04 கோடி தேர்தல் நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

நேற்று டில்லியில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய  அமைச்சர் இந்திரஜித் குப்தாவின் நூறாவது பிறந்த நாள் விழா நடந்தது.  இதில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “தற்போது ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் 90% தேர்தல் நிதி வந்துள்ளது.  எனவே தேசிய தேர்தல் நிதி திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2018 மார்ச் முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ரூ.5851 கோடி மதிப்பிலான தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இந்த பத்திரங்களில் 80.6% டில்லியில் மாற்றப்பட்டுள்ளன.  இதற்கு முக்கிய காரணம் பல கட்சிகளின் தலைமையகம் டில்லியில் இருப்பதாகும்.   டில்லியில் விற்பனை செய்யப்பட்டது 847.5 கோடிக்கான பத்திரங்கள் மட்டுமே ஆகும்.

மும்பையில் ரூ. 178.36 கோடிக்கா பத்திரங்கள் விற்கப்பட்ட நிலையில் ரூ. 11.13 கோடிக்கான பத்திரங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.  அத்துடன் சென்னையில் ரூ.184 கோடிக்கான பத்திரங்கள் விற்கப்பட்ட நிலையில் ரூ. 51.55 கோடிக்கான பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.  எனவே இந்திரஜித் குப்தா கொண்டு வந்த இந்த தேர்தல் நிதி சட்டம் என்பதை தற்போது மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என கூறி உள்ளார்.