Random image

ஒரு அமைச்சருக்கு இனி ஒரே கார் தான் : மம்தா அதிரடி

கொல்கத்தா

மைச்சர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணச் செலவுகலை குறைக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் திட்டங்களுக்கான செலவை விட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்காகவும் அதிக செலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது.   இதனால் மாநில அரசு திட்டங்களுக்காக பெறப்படும் கடன் தொகையில் பெரும் பகுதி இவ்வகை செலவுகளுக்கே பயன்படுவதாகவும் அதனால் திட்டங்கள் நிறைவேறுவது தாமதாகவும் கூறப்பட்டுள்ளது.   இதனால்  மேற்கு வங்க அரசு செலவுக் குறைப்பு திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதை ஒட்டி மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனையில் கலந்துக் கொண்ட அதிகாரி ஒருவர், “முதல்வர் அரசின் செலவுகளை குறைப்பதில் முழு மூச்சாக இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஒரே அமைச்சர் அல்லது அதிகாரிகள் பல துறைகளில் பொறுப்பேற்று உள்ளனர்.  அதனால் அவர்களுக்கு ஒவ்வொரு துறையில் இருந்தும் ஒரு கார் வழங்கப்படுகிறது.   இதனால் செலவு அதிகம் ஆகிறது.   அதை ஒட்டி இனி ஒரு அமைச்சர் அல்லது அதிகாரிக்கு ஒரே கார் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.    அவர் எத்தனை துறையை கவனித்தாலும் அவர்களுக்கு ஒரு கார் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் அவர்களுக்கு மட்டுமே மாநிலப் பயணங்களின் போது  உணவு மற்றும் இதர செலவுகள்  அனுமதிக்கப்படுகிறது.    அதிகார பூர்வமற்று அவர்களுடன் வருபவர்களுக்கான செலவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது.    வெளிநாட்டுப் பயணங்களை அமைச்சர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.   அத்தகைய பயணங்களை முதல்வர் அனுமதி அளித்தால் மட்டுமே செய்ய வேண்டும் என திர்மானங்கள் இயற்றபட்டுள்ளன” என தெரிவித்தார்.

ஆலோசனை கூட்ட முடிவில் மம்தா செய்தியாளர்களிடம், “நடந்து முடிந்த இந்த கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது.  செலவினங்களை குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.   ஒவ்வொரு வருடமும் பழைய கடன்களை திருப்பித் தர ரூ.47000 கோடி செலவு செய்கிறோம்.    மத்திய அரசும் பல திட்டங்களுக்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது.  எனவே மக்கள் நலனுக்காக செலவுகளை குறைக்கும் நிலைக்கு மத்திய அரசு நம்மை தள்ளி விட்டது” என தெரிவித்தார்.