உ.பி. பசுவதை எதிர்ப்பு போராட்டம் :காவல்துறை ஆய்வாளர் உட்பட இருவர் கொலை

புலந்த்சாகர், உத்திர்ப்பிரதேசம்

ரு பசுவை கொன்றதால் ஏற்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்து ஒரு காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள சியானா என்னும் பகுதியில் ஒரு இறந்த பசுவின் உடல் ஒரு நிலத்தில் கிடந்துள்ளது. அந்த பசுவை கொன்றவர்களை கண்டுபிடிக்கக் கோரியும் அந்த பசுவதையை எதிர்த்தும் உள்ளூர் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த போராட்டம் சாலை மறியலாக மாறியது.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று மக்களிடம் கலைந்து போகச் சொல்லி உள்ளனர். போராட்டக்காரர்கள் கலைந்து போக மறுத்துள்ளனர். அப்போது திடீரென போராட்டக்காரர்களில் சிலர் காவல்துறையினரை கல் எறிந்து தாக்கி உள்ளனர்

சுபோத் வர்மா

அப்போது கடும் கலவரம் வெடித்துள்ளது.   இந்த கலவரத்தில் காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.   காவல் நிலையம் தாக்கப்பட்டது.   கூட்டம் கட்டுக்கடங்காமல் வன்முறையில் ஈடுபடவே காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைந்துள்ளனர்.

இந்த கல்லெறி சம்பவத்தில் காவல்துறை ஆய்வாளர் சுபோத் வர்மா கடுமையாக காயம் அடைந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் போராட்டம் நடத்திய வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் அமைதி நிலவ உதவும் வகையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

You may have missed