சென்னை புழல் : சிறைக்கைதி திடீர் மரணம்

சென்னை

சென்னை புழல் சிறையில் ஒரு கொலைக்கைதி நேற்று திடீரென மரணம் அடைந்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

சென்னையில் உள்ள அனகாபுத்தூரில் உள்ள தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் 48 வயதான விநாயகம் என்பவர்.   இவர் ஒரு கொலை வழக்கில் சம்பந்த்தப்பட்டவர்.   இவரை சங்கர் நகர் காவல்நிலைய காவலர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்தனர்.  தற்போது இவர்  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 7.30 மணிக்கு விநாயகம் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.   அதனால் அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.    சிறை காவலர்கள் உடனடியாக  சிறை மரூத்துவமனைக்கு விநாயகத்தை அழைத்துச் சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.   ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விநாயகம் மரணம் அடைந்துள்ளார்.   சிறைக்காவலில் இருந்த ஒரு கைதி மரணம் அடைந்தது மற்ற கைதிகளிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.