அனைத்து கல்லூரிகளிலும் ஒரே ஷிஃப்ட் அமல்படுத்த மனு : அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

சென்னை

னியார் கல்லூரிகளிலும் அரசுக் கல்லூரியைப் போல் ஒரே ஷிஃப்ட் முறையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் கல்லூரிகள் திறக்க உள்ளன.

இதில் அரசு கல்லூரிகளில் ஒரே ஷிஃப்ட் முறை அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே முறையை தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் தமிழக பதில் மனுத் தாக்கல் செய்ய இறுதிக் கெடு  விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதில் அளிக்கத் தவறினால் உயர் கல்வித்துறை செயலாளர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.