ஒரு தலை காதலா? பொறியியல் கல்லூரி மாணவி கொலை: மாணவர் வெறிச்செயல்!

 

கரூர்:

ல்லூரி மாணவி முன்னாள் மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு தலைக்காதல் விவகாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மாணவி சோனாலி
மாணவி சோனாலி

கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சோனால. இன்று வழக்கம் போல் கல்லூரி வகுப்பறையில் இருந்தார். திடீரென கல்லூரியின் முன்னாள் மாணவர் உதயகுமார். வகுப்பறைக்குள் புகுந்து  மாணவியை  கட்டையால் தாக்கினார்.

இதனால் வகுப்பறையில் இருந்த மற்ற மாணவிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.  மற்றும் சிலர் சேர்ந்து உதயகுமாரை பிடித்தனர்.

உதயகுமார் தாக்கியதில் மாணவியின் தலை, உடல் போன்ற இடங்களில் அடிபட்டு ரத்தம் வழிந்த்து. இதனால் அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்டது. அதற்குள் அவரது உயிர் பிரிந்தது. உயிரிழந்த மாணவி சோனாலி மானா மதுரையை சேர்ந்தவர்.

மாணவர் உதயகுமார்
மாணவர் உதயகுமார்

மாணவியை தாக்கிய உதயகுமார் கல்லூரிக்கு சரியாக வராததால், கல்லூரியை விட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருதலைக் காதல் காரணமாக மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாணவி சோனாலி இறந்ததை அடுத்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.