நாட்டில் மூன்றில் ஒரு பழங்குடியினர் மீது பயங்கரவாத வழக்கு : ஆய்வறிக்கை

டில்லி

ழங்குடி மக்களில் மூன்றில் ஒருவர் மீது பயங்கரவாதிகளான மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஒரு  ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகமாகி வருகிறது.   அதை ஒட்டி பல கைதுகள் நடைபெறுகின்றன.   ஆனால் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்களா அல்லது நிரபராதிகளா என்னும் சந்தேகம் மக்களிடையே உள்ளது.

இது குறித்து அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று ஆய்வு செய்துள்ளது.   அந்த ஆய்வில் பல இடங்களில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பாடுபடும் பலர் மீது மாவோயிஸ்டுகள் என வழக்குப் பதியப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.     இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 27% பழங்குடியினர் மற்றும் 35% தலித்துகள் உள்ளனர்.

இதுவரை நாடெங்கும் கைது செய்யப்பட்டவர்களில் 5563 பேர் மீது மட்டுமே வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   அவர்களிலும் பலர் நிரபராதிகள் என கூறப்படுகிறது.     மேலும் கைது செய்யப்பட்டவர்களில் தலித்துக்கள்,  பழங்குடியினர் தவிர இஸ்லாமியர்களும் அதிக அளவில் உள்ளனர்.   அதே நேரத்தில் திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களில் சம்பந்தப் பட்டவர்கள் மீதும் மாவோயிஸ்டுகள் என பொய்க் குற்றம் சாட்டப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.