ரெயிலில் ஒரு டன் குட்கா பறிமுதல்

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆர்பிஎப் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரெயில்நிலையம் வந்த நிஜாமுதீன் ரெயில் போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு டன் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் குட்கவைட பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.