ஆந்திராவில் பாஜக எம்பி கார் மோதி பெண் பலி….மற்றொரு பெண் படுகாயம்

ஐதராபாத்:

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பாஜக ராஜ்யசபா உறுப்பினர் கார் மோதி ஒரு பெண் பலியானார். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், ஆந்திராவை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினருமான நரசிம்மராவ் பயணம் செய்த கார் 2 பெண்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குண்டூர் மாவட்டம் தடேபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘அந்த பெண்கள் ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு சாலையை கடந்துள்ளனர். அப்போது எம்.பி.யின் கார் அவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். காயமடைந்த மற்றொரு பெண் விஜயவாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எம்.பி.யின் கார் குண்டூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற போது விபத்து ஏற்பட்டது’’ என்றனர்.

‘‘காரில் பயணம் செய்த எம்.பி விபத்து நடந்ததும் மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார்’’ என்று தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் சமூக வலை தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed