சென்னை:
ய்வூதியம் பெறும் முதியோர் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று அளிக்க ஓராண்டு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நிகழாண்டில் ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் வாழ்வு சான்றிதழ் நேரில் சென்று அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வழக்கமாக ஆண்டுதோறும்,  ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்குள் தங்களது வாழ்வு சான்றினை அளிக்க  வேண்டிய  ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றினை நேரில் வழங்க ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்ட உள்ளது.
பொதுவாக வாழ்வு சான்றிதழை சம்பந்தப்பட்ட  நபர்,  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்பாக நேரில் ஆஜராக வேண்டும். இதையும் செய்யத் தவறினால் நவம்பரில் இருந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிவை நிறுத்தப்படும்.
இந்த நிலையில், கொ ரோனா நோய்த்தொற்று காரணமாக சிறப்பு நிகழ்வாகக் கருதி நிகழாண்டில் வாழ்வுச் சான்றினை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டிருந்தது. இதையடுத்து,  ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை சிறப்பு நிகழ்வாகக் கருதி தமிழக அரசு எடுத்துள்ளது  கூறப்பட்டுள்ளது.