ஜவாஹிருல்லாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை!! நீதிமன்றம் உறுதி

சென்னை :

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. எழும்பூர் கோர்ட் வழங்கிய ஒரு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.