‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறும் ரியோ…!

சிவகார்த்திகேயனின் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படம் வெளிவந்து நேற்றோடு ஒரு வருடம் ஆகிறது.

அதை நினைவுகூறும் வகையில் ரியோ தனது ட்விட்டரில்

“என் வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான நாள் இன்று.என்னால் நம்பவே முடியாத ஒரு சம்பவம் நடந்த நாள். என்னை நானே பெரிய திரையில் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். இந்த படம் என்னை ஒரு நடிகன் ஆக்கியது, ஒரு சிறந்த இயக்குனரை எனக்கு கொடுத்தது, ஒரு சிறந்த தயாரிப்பாளரையும் கொடுத்தது, அதைவிட மேலாக எனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைத்தது. சீக்கிரமா இன்னொரு படம் பண்ணுவோம். என் மீதும் என் குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்ததற்காக நான் சிவகார்த்திகேயன் சாருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.”

“அவர் இல்லை என்றால் இந்த நாள் சாத்தியமாகி இருக்காது. எப்போதும் நன்றியுடன் – ரியோ ராஜ்.” என பதிவிட்டுள்ளார் .

You may have missed