ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரும் ‘ஒங்கள போடணும் சார்’…!

ஸ்ரீஜித், ஆர்.எல்.ரவி கூட்டணி இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஒங்கள போடணும் சார்’. அடல்ட் காமெடி என்கிற ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

சஞ்சுளா, ஜோனிடா, அனு நாயர், பிராச்சிதா மற்றும வைசாலி ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு ரெஜிமோன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.