தஞ்சாவூர்,

திராமங்கலத்தில் கச்சா எண்ணை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஓஎன்ஜிசிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்ட்ம் 121வது நாளாக தொடர்ந்து வருகிறது.

ஓஎன்ஜிசி  நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க குழாய்கள் பதிப்பதினால் விவசாய நிலங்கள் பாதித்து, குடிநீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி அப்பகுதி மக்கள்,  இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்கள்  போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு,  தடியடியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து  போராட்டத்தை தூண்டி விட்டதாக பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜன், ரமேஷ் உள்பட 10 பேரை  கைது செய்து,  கடந்த ஜூலை 1ந்தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 43 நாட்களுக்கு பிறகு அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கதிராமங்கலத்தில் போராட்டம் 121வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்ர்களின் கோரிக்கை குறித்து  இதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்வில்லை. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.