நெட்டிசன்:

கண்மணி குணசேகரன் முகநூல் பதிவு…

#மரணக்_குழிகள்.

நெய்வேலி வடக்குத்து முந்திரிப் பகுதிகளில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மூடப்படாமல் கிடக்கிற ONGCக்காரனின் ஆழ்துளை மரணக்குழிகள் இவைகள். இக்குழிகளின் அபாயம் புரியாமல் ஆடுமாடு மேய்க்கிற பசங்கள் கால்களை தொங்கவிட்டுக் கொண்டு குந்துவதும் ஓணான்களை பிடித்து உள்ளே விட்டு விளையாடுவதும் இன்றும் நடக்கிறது என்கிறார் இதை மூடுவதற்கு முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிற சமூக ஆர்வலர் Raja Mohan

மத்தியஅரசு நிறுவனமான ஓஎன்ஜிசி தோண்டி மூடப்படாத ஆழ்துளை கிணறு

மேலும் இக்குழிகள் இதுநாள்வரையில் நமக்குத் தெரியாமலேயே நம் பகுதிகளில் ஏராளமாக இருந்து கொண்டிருக்கின்றன என ஆச்சரியப்படும் இவர் எண்ணெய் சோதனைக்காக 500 அடிக்கும் மேலாக தோண்டப்பட்டுக் கிடக்கும் இவைகளை என்ன தொழில்நுட்பத்தில் மூடவேண்டும் என புரியாமல் மண்ணியியல் அறிஞர்கள் ஆலோசனைகளை கேட்கப் போவதாகவும் சொல்கிறார்.

நம் ஊரிலும், முந்திரி மற்றும் முட்காடுகளிலும் நமக்குத் தெரியாமல் இது போன்ற மரணக்குழிகளை ONGC க்காரன்கள் மூடாமல் போட்டு வைத்திருக்கலாம். ஆடுமாடு மேய்க்கிற பசங்களை விசாரியுங்கள். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்க்கு தகவல் கொடுத்து மூட முயலுங்கள். உதவி தேவைப்படின் (கடலூர் மாவட்டமாக இருப்பின்) Raja Mohan வடக்குத்து 8098821699. அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
#குறிப்பு: தகவல்கள் மற்றும் படங்கள் வடக்குத்து ராஜமோகன் அவர்களின் தொலைபேசி வழியிலும், Kalaikovan Balasubramaniyan அவர்களின் பதிவிலிருந்தும் நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.