திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் வெளியேறியதால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செட்டிகள் நாசமாயின. இதன் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

திருவாரூர் அருகே   எருக்காட்டூரில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பருத்தி சாகுபடி வயலில்கச்சா எண்ணெய் பரவியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் சேதமடைந்துள்ளது.

டெல்டா மாவட்டங்கிளல் மக்களின் எதிர்ப்பை மீறி மத்தியஅரசு  நிறுவனமான ஓஎன்ஜிசி நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்துவருகிறது. இதற்காக அந்த பகுதியில் விலைநிலங்களுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் எருக்காட்டூர் வழியாக நரிமனம் வரை செல்கிறது.

சம்பவத்தன்று  எருக்காட்டூர் பகுதியில் செல்வராஜ் என்ற விவசாயியின் நிலத்தின் கீழ் செல்லும் எண்ணை குழாய் உடைந்த கச்சா எண்ணை வெளியேறியது. இதன் காரணமாக  அந்த நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்த  விவசாயி  செல்வராஜின் பயிர்கள் அனைத்தும் நாசமானதோடு மட்டுமல்லாமல், அந்த விவசாய நிலம் இனிமேல் விவசாயத்துக்கு உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு கச்சா எண்ணை தேங்கி உள்ளது  சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கச்சா எண்ணெய் பரவி உள்ளது.

இதையடுத்து, குழாயின் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், நிலம் பாழாய் போனதற்கும், பயிர் சேதத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயி செல்வராஜ் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.